சதுரங்கம் எனும் செஸ் விளையாட்டு உலகம் முழுக்க ஒரே முறையில் விளையாடப்படும் அறிவு சார்ந்த விளையாட்டு ஆகும். ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிலும் பின்னர் மங்கோலியா வழியாக உலகமெங்கும் பரவியது என்று வரலாறு கூறுகிறது. இந்தியாவில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், பின்னர் ரஷியா முழுவதும் பரவியது. இதன் சரியான விதிமுறைகள் இத்தாலியில் பதினாறாம் நூற்றாண்டில் உருவானது.
மதியூகமும், தந்திரமும் இவ்விளையாட்டுக்கு அடிப்படை எனலாம். சதுரங்கம் விளையாட்டாக மட்டுமின்றி கலையாகவும், அறிவியலாகவும் பார்க்கப்படுகின்றது. இது போர் விளையாட்டாகவும், மூளை சார்ந்த போர்க் கலையாகவும் பார்க்கப்படுகின்றது.

மனித இனத்தின் ஆரம்ப கட்ட விளையாட்டுகளில் சதுரங்கமும் ஒன்று. இவ்விளையாட்டை தொடர்ந்து விளையாடும் சிறுவர் சிறுமியர்கள் மூளை நுட்பமாகவும், அவர்களின் படிப்புத்திறன் மேம்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். செஸ் விளையாடுவதன் மூலம் நம்முடைய மூளையின் நரம்புகள் தூண்டப்பட்டு செயல்திறன் மேம்படும்.
மூளையின் இரண்டு பக்கங்களும் சிறப்பாக செயல்பட பயிற்சி அளிக்கப்படுகிறது. மன நோய்களான அல்சைமர், மன அழுத்தம், பதற்றம் போன்றவை குணப்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் சிந்திக்கும் திறன், முடிவெடுக்கும் திறன், பிரச்சினைகளை கையாளும் வேகம், தன்னம்பிக்கை போன்றவை அதிகரிக்கின்றன. ஆழமாக சிந்தனையை ஒருமுகப்படுத்தும் தன்மை, மன அமைதி வளர்கிறது. செஸ் விளையாடுவதன் மூலம் ஆட்டிசம் போன்ற நோய்களும் குணமடைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

முதன் முதலில் செஸ் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கான புத்தகம் எழுதிய பெருமை லூயிஸ் ராமிரேஸ் என்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரையே சாரும். (The reception of love and playing with chess ) அவருடைய என்ற புத்தகம் இன்றளவிலும் போற்றப்படுகிறது.
International Chess Day ஜூலை 20ம் திகதி – உலகிலேயே ஒரு விளையாட்டிற்கு சிறப்பு தினம் கடைபிடிப்பது சதுரங்க விளையாட்டிற்குத்தான். ஒரு விளையாட்டாக மட்டுமல்லாமல் ஒரு கலையாகவும், வாழ்வியல் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் அறிவியலாகவும் விளங்குகின்றது. நாமும் விளையாடி, நம் பிள்ளைகளுக்கும் சதுரங்க விளையாட்டை அறிமுகப்படுத்துவோம்.
சதுரங்க ஆட்டத்தினை முறையாக கற்றுக்கொள்ள விரும்புபவர்ககளுக்கு, தரமான பயிற்சியை இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையில் பயிற்றுவிக்க ChessGuru.lk இன் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்

சதுரங்கம் ஒரு விளையாட்டு மட்டுமல்ல, இது பகுத்தறிவுடன் கூடிய வாழ்வியல், சிந்தனைத்திறன் வளர்க்கும் அறிவியல்.